புதிய அமைச்சர் திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை ஒதுக்கீடு ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி அமைச்சர் அவையில் துறைகள் மாற்றி அமைத்து முதல்வர் ரங்கசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். எந்த துறையும் வழங்காமல் இருந்த திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்க துறையை ஒதுக்கினார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்ஆர்.காங்கிரசை சேர்ந்த 3 பேரும் பாஜகவை சார்ந்த 2 பேரும் அமைச்சர்களாக உள்ளனர் . இதில் என்.ஆர்.என்ன காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி அமைச்சராக காரைக்காலை சேர்ந்த திருமுருகன் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக துறை ஒதுக்கவில்லை. இந்நிலையில் நேற்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக முதல்வர் ரங்கசாமி ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை ராஜ் நிவாசில் சந்தித்து திரு முருகனுக்கு துறை ஒதுக்கீடு மற்றும் துறை மாற்றி அமைப்பதற்கான கடிதத்தை வழங்கினார். இதற்கிடையே பிற்பகல் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்குவது குறித்த அதிகாரி பூர்வமான அறிவிப்பை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் வெளியிட்டார். அதில் முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரையின் பெயரில் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு மற்றும் துறை மாற்றம் செய்து கஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார் .அதன்படி அமைச்சர் திருமுருகனுக்கு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, வீட்டு வசதி, கலை மற்றும் பண்பாடு, பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. . அமைச்சர் சந்திர பிரியங்கா வசம் வைத்திருந்த ஆதிதிராவிடர் நலத்துறை சாய் சாய் சரவண குமாருக்கு வழங்கப்பட்டது சரவணகுமார் வைத்திருந்த குடிமை பொருள் வழங்கல் துறை புதிய அமைச்சர் திருமுருகனுக்கும் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Related posts

Leave a Comment