கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யக்கூடாது – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் என இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் “கனவு இல்லம்” திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள்: வழிகாட்டுதல் வெளியீடு- ரூ3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவு தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும் விதம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம்ஆகும். இந்த அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் களை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர்…

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம்

கோப்பு படம்

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், இன்று காலை தனது நண்பர்களுடன் இமயமலை செல்கிறார். அங்கு பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை…

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ படத்துக்கு சம்பளம் வாங்காத கார்த்திக் ராஜா

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்துஉருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. வரும் 31-ம்தேதி வெளியாகும் இந்தப் படத்தை ராம் கந்தசாமி இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இதில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தைநட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன்,லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை 9 வி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம் கந்தசாமி கூறும்போது, “நாயை, பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பெரும்பாலானவர்கள் பேசுவார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்ப்பது பற்றி என் மனைவி சொன்னார். அதைக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையிலான கதையாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம். இதில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவிடம் தயக்கத்தோடு இசையமைக்கக்…

தொழிலபதிரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு இளம்பெண் கைது

பட்டினப்பாக்கத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு வருமாறு தொழிலதிபரை வரவழைத்து, கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன். பர்மா பஜாரில் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், ‘சில நண்பர்கள் அழைத்ததின்பேரில் கடந்த 17-ம் தேதி பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெருவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றேன். அங்கு காரில் இருந்து இறங்கியதும், ஒரு கும்பல் மற்றொரு காரில் என்னை கடத்திச் சென்று, மதுரவாயலில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. எனது நண்பர் மூலம் அந்த பணத்தை கொடுத்த பின்னர், அந்த கும்பல் என்னை விடுவித்தது.…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்ய திட்டம்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. மே 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் போது கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தோ்வுக்கான அனுமதி சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பெறலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு தாண்டிய வெயில்: உச்சகட்டமாக சென்னையில் 105 டிகிரி

தமிழகம் முழுவதும் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:- சென்னை – 105.08, கடலூர் – 101.12, ஈரோடு – 100.76, மதுரை விமான நிலையம் – 101.12, புதுச்சேரி – 101.12,…

லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு!

கீழ் வேளூரைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் எம்டி முடித்து விட்டு, ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். சென்னை அயனாவரத்தில் விடுதியில் தங்கியிருந்தபடியே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சென்று பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் தன் மனைவி சரனிதாவிடம் பேசுவதற்காக இன்று காலை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது நீண்டநேரமாக சரனிதா செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து சரனிதாவின் கணவர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்துக்கு போன் செய்து சரனிதாவின் அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.விடுதி நிர்வாகத்தினர் சரனிதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, லேப்-டாப் சார்ஜ் ஒயரைக் கையில் பிடித்தப்படியே சரனிதா மின்சாரம் தாக்கி இறந்து கீழே விழுந்து கிடந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து…

சென்னை வியாசர்பாடியில் திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்

பொறியியல் கல்லூரி மாணவரிடம் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிப்பு சென்னை வியாசர்பாடி, பாரதிநகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் சித்தார்த் (20). பொறியியல் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 24-ம் தேதி மாலை, இருசக்கரவாகனத்தில் வியாசர்பாடி சாந்தி நகர் 3-வது தெருவழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டிப்டாப் ஆசாமி ஒருவர் சித்தார்த்தை வழிமறித்தார். தன்னை போலீஸ் என கூறிய அவர், சிறிது தூரம் தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்படி கூறினார். பின்னர், சிறிது தூரம் சென்ற உடன் வீடு ஒன்றை காண்பித்து, அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி இந்த வீட்டிலிருந்து கஞ்சா வியாபாரி யாரேனும் வருகிறார்களா? என சிறிதுநேரம் கண்காணிக்கும்படி கூறி சித்தார்த்தை அங்கு நிற்க வைத்தார். மேலும், இருசக்கர வாகனத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு,…