உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல. இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில்…
Category: தமிழ்நாடு
ஜனவரி 6- ஆம் தேதி தமிழக சட்டசபை- சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டம் என்பதால் குறுகிய நாட்களே கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர 19 சட்ட மசோதாக்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ந்தேதி கூட்டப்பட உள்ளது. இது குறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விதி 174 (1) ன் கீழ் தமிழக சட்டமன்றத்தை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி கூட்டி…
நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை6 பேர் அதிரடியாக கைது- கார் பறிமுதல்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28). இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார். மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார். இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில்…
ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள், புதிய கட்டடங்கள் திட்டங்கள்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டம் என பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நிறைவுபெற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை பட்டியலிட்டார். அவர் பேசுகையில், ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை! சில நாட்களுக்கு முன்புதான்,…
திருச்சியில் கலைஞர் நூலகம்- அரசாணை வெளியீட்டது தமிழ்நாடு அரசு
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள…
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்- தூத்துக்குடியில் 30-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் இனி மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் கோவில்கள் தணிக்கையின் கீழ் வரவில்லை
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:- கோவில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை ஏன் இருக்க கூடாது என்பதற்கு இது ஓரு சான்று. இதற்கு எதிராக தமிழக பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளது. தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அரசின் நிலை மோசமாக உள்ளது. அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒரு போதும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமில்லை. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது. முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா ? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் நிவாரண உதவி
ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு விசிக சார்பில் நிவாரண உதவி விசிக சார்பில் நிவாரண உதவி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ₹10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் திருமாவளவன
7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடும் மழையை பெய்துவருகிறது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
