நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, “இரண்டாவது முறையாக மீண்டும் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். தங்கள் இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளம் ஆகும். இந்த இருக்கையின் அழகே நீதி தவறாமை தான். கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். ஆனால், ஆளுங்கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆளும் கட்சி என்பது ஆட்சி அதிகாரத்தோடு இருக்கிற…
Category: பொது செய்தி
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தேர்வு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார். இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓர் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு – காங்கிரஸ் அறிவிப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. ஆனால் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்க காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் உண்ணாவிரதம் இருந்த டெல்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்றுடன் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிஷியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து சிகிச்சை வழங்குவதற்காக அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிஷின் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் மிகவும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு வேகமாக அதிஷியின் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறைவுது மிகவும் ஆபத்தான…
நீட் தேர்வே வேண்டாம்- பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அனிதா உள்பட பல மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் 5-ந்தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியானது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கடும்…
பாராளுமன்றத்தில் சட்ட புத்தகத்தை கைகளில் ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அணிவகுப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களும், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஓரளவு சம பலத்துடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே மிக கடுமையாக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 23 கட்சி களும் தேர்தலின் போது பல தொகுதிகளில் ஒருங்கி ணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. அந்த அடிப்படையில் பாராளுமன்றத்துக்குள்ளும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்து இருக்கி றார்கள். குறிப்பாக முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்துடன் செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை இன்றுமுதல் அரங கேற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்டனர். அவர்களது திட்டப்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கும்…
புதுச்சேரியில், விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சாய் சரவணன் தகவல்
புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி ஆளுநரின் ஒத்துழைப்புடன் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் பணியும் நடைபெற உள்ளதாக அமைச்சர் சாய் சரவணகுமார் தெரிவித்தார்.!
நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த 2 ஆசிரியர்களை சிபிஐ கைது செய்து விசாரணை
நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த 2 ஆசிரியர்களை சிபிஐ கைது செய்து விசாரணை நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதிநடைபெற்றது. இதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ம்தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதிநடந்தது. பின்னர், விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. இதன்பிறகு, திடீரென ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில்ஆன்லைனில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த 2 நாட்களில் விண்ணப்பித்தவர்கள் குறித்து கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். நீட் தேர்வு நடப்பதற்கு ஒருநாள்முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததை அந்தமாநில போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தேசிய…
இலங்கையின் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 18 பேர் சிங்கள கடற்படையினர் கைது செய்தனர்
கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று கடற்சீற்றம் சற்றே குறைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 18 மீனவர்களும் காங்கேயன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைதான 18பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்
நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுதல், வினாத்தாளை கசியவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்தியஅரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசு நடத்தும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்தியஅரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அமைச்சகம்…