புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி ஆளுநரின் ஒத்துழைப்புடன் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் பணியும் நடைபெற உள்ளதாக அமைச்சர் சாய் சரவணகுமார் தெரிவித்தார்.!