நில ஆக்கிரமிப்பில் கட்டிடம் கட்டியதாக கூறி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் தரைமட்டம்

குண்டூர் மாவட்டம், தாடேபல்லி கூடம் சீதாநகரில் ஜெகன்மோகன் ஆட்சியில், நீர்வளத்துறைக்கு சம்மந்தப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் 2 ஏக்கரில் மிகப்பெரியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியது. ஆதலால், இக்கட்டிடம் நில ஆக்கிரமிப்பு செய்து, சட்டத்தை மீறி கட்டியது என்பதால் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்தனர். கட்சி அலுவலகம் கட்ட பட்டா இல்லை. திட்ட அனுமதி பெறவில்லை. எந்தவொரு அனுமதியும் இன்றி இக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குண்டூர் மாவட்ட தெலுங்குதேசம் கட்சியின் செயலாளர் ஸ்ரீநிவாச ராவ் மாநகராட்சி ஆணையருக்குப் புகார் அளித்ததின் பேரில்,நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடம் ஜேசிபி இயந்திரங்களால் இடிக்கப்பட்டது. இதேபோன்று, கடந்த 2019-ல்…

ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம். கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.* கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ். இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா? சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க.…

கடலூர் தாழங்குடா மீனவர்களை தாக்கி மீன்களை பறித்து சென்றபுதுச்சேரி வீராம்பட்டினம் மீனவர்கள்

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து…

சென்னை புறநகர் வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்

மும்பையில் ஏற்கனவே புறநகர் ரெயில்களில் ஏ.சி. வசதி உள்ளது.சென்னையில் சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டது. இதற்கான பிரத்யேக ரெயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. மொத்தம் 8 ரெயில்கள் தயாரித்து வருவதாகவும், அதில் இரண்டு சென்னை புறநகர் சேவைக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ரெயில்வேத்துறை இரண்டு ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் பயணிப்போர் ஏ.சி. பெட்டியில் பயணிக்கலாம். இதனால் வியர்வையின்றி, சோர்வின்றி வேலைக்கு செல்லலாம். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லலாம். இதில் பயணிப்பதற்கான கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

கள்ளச்சாராய உயிரிழப்பு 47 ஆக உயர்வு-ஆட்சியர் அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினம் களைகட்டியது

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், “இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் ‘யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்’ என்பதில் நான்…

ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள 16 பேரும் கவலைக்கிடம் மருத்துவமனை அறிக்கை

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேர் நிலை குறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்…

மத்திய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை மையங்கள் அமைக்க அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவு

அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதீத வெப்பம் காரணமாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேர் உயிரிந்துள்ளனர். கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 12 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லோகியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார். இந்த சூழலில், வெப்பச்சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். மத்திய…

தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்து விட்டது- பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது.பள்ளிக் கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க…

கள்ளச்சாராயம் விவகாரம்- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்- எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்ற மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய…