புதுச்சேரி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாட்டம் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் வழிகாட்டுதலின்படி, ஏம்பலம் தொகுதி கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கடைவீதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி கழக செயலாளர் பி ஆர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். கிருமாம்பாக்கம் கடைவீதி நான்கு முறை நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேவநாதன் முன்னாள் மாநில மீனவர் அணி அமைப்பாளர் தொகுதி கழக மூத்த முன்னோடி குழந்தை மனோகரன், மகளிர் தொண்டர் அணி மாநில அமைப்பாளர் சுமதி, தொகுதி துணை செயலாளர் ஏம்பலம் கோவிந்தராஜ், தொகுதி பொருளாளர்…

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்விழா முதல்வர் ஸ்டாலின் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின். மலர் தூவி மரியாதை செலுத்தினார் அப்போது அவருடன் அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஎன்.நேரு போன்றோரும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற திமுக எம்பிக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக, இன்று காலை சென்னை…

கலைஞர் கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், எனக்கு கிடைத்தது- சோனியாகாந்தி பேச்சு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில், டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது நண்பர்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு…

வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக தலைமை கலந்தாலோசனை

புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் முகவர்கள் பங்கேற்பு!கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரையின்படி, 4–ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து, கலந்தாலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட கழகச் செயலாளர்கள், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.அதன்படி புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் திமுக சட்டத்துறைச் செயலாளர்…

வெப்ப அலையில் சிக்கி 19 பேர் பலிசோகத்தில் மூழ்கிய பீகார்

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,…

காங்கிரஸ் சார்பில் கர்நாடக மேல்சபையில் தமிழருக்கு வாய்ப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

கர்நாடக மேல்சபையில் 11 எம்.எல்.சி.களின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூன்) நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 11 இடங்களுக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் உள்ள காங்கிரசின் பலத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு 7 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி டெல்லி சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி. ஆகியோருடன் 2 முறை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 7 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா,…

புதுச்சேரியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலில் 108 சிதறு தேங்காய் உடைத்து அண்ணாமலை தரிசனம்

புதுச்சேரியில் பழமையான சிவன் கோயிலுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 108 சிதறு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தார். அங்கு அவர் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுப் புறப்பட்டார். புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தார்.பின்னர், பாலா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை காட்டப்பட்டது. அப்போது 108 சிதறு தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்த அவர், அதன்பிறகு வேதாம்பிகை சன்னிதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த ஸ்ரீ மூலநாத சுவாமி திருக்கோயில்…

எல்ஐசி சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடி

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இது, ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, எல்ஐசி-யின் சொத்து மதிப்பு ரூ.51 லட்சத்து 21 ஆயிரத்து 887 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்து 205 கோடியாக இருந்தது. எல்ஐசி சொத்து மதிப்பு ஓராண்டில் 16.48% அதிகரித்துள்ளது. எல்ஐசி-யின் சொத்து மதிப்பு, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பைப் (ரூ.28 லட்சம் கோடி) போல சுமார் 2 மடங்கு…

ஒரே நேர்க்கோட்டில் தென்படும் 6 கோள்கள்.

வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரியும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்; இதற்கு பின் வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் இக்கோள்கள் ஒரே வரிசையில் தென்படும்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம்: மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் ரத்து

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த ஆலோசனை கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எந்த காரணமும் கூறாமல் திடீரென ரத்து செய்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1893-ஆம்ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையை தமிழக பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. பழமையான இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குதொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி…