புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் முகவர்கள் பங்கேற்பு!
கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரையின்படி, 4–ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து, கலந்தாலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட கழகச் செயலாளர்கள், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி. அவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக தலைமை கலந்தாலோசனை
