பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. அத்துடன் ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேகம் நீங்கள். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் மீண்டு வருவீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! உங்களுக்கு நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார். முன்னதாக நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்…
Category: இந்தியா
கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் பாலம் ஆற்றில் இடிந்து விழுந்தது
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே கடந்த 1983-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தது. இந்த நிலையில் பாலம் பழமையானதால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியப்படவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பாலத்திற்கு மாற்றாக அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலம் வழியாக ஒரு லாரி ஆற்றை கடந்த போது திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை பத்திரமாக மீட்டன…
திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட் மோசடி கும்பலுக்கு ஆந்திரா போலீசார் வலைவீச்சு
திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை ரூ.14,449 கட்டணத்தில் டிக்கெட்களை குறிப்பிட்ட 545 பேர் மட்டுமே ஆன்லைன்…
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யபட்டார் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது
நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற…
பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர்…
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது- மேலும் 180 பேரை காணவில்லை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள். நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. மீட்பு பணிகளை வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், வனத்துறை மந்திரி சுசீந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் மந்திரி கே.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிலச்சரிவு ஏற்பட்ட…
கேரளா நிலச்சரிவில் இறந்த அடையாளம் தெரியாத 31 உடல்கள் ஒரே இடத்தில் எரிக்கப்பட்டது
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அடையாளம் காணப்படாத 31 உடல்கள் 158 உடல் பாகங்களும் புதுமலையில் உள்ள 64 சென்ட் இடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை புதைக்க சட்டம் இருந்தாலும், இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாகவே…
கேரளா ஆரியநாடு பகுதியில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் அமல், அகில். அனில்குமார் கேரள போலீஸ் ஐ.ஜி. ஹர்ஷிதா அத்தலூரின் வாகன டிரைவர் ஆவார். நேற்று அவரது வீட்டுக்கு அவருடைய சகோதரர் சுனில்குமார் மற்றும் சகோதரி ஸ்ரீபரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். மதியம் அனில்குமாரின் வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவர்கள் மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்கள். அங்கு பயிர்களுக்கு உரமிடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். வேலை முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனில்குமாரின் சகோதரி ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த்(25) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப்பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். அனில்குமாரின்…
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் 1,208 வீடுகள் அழிந்தது 350 மேற்பட்டோர் பலி
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்ட மாகிவிட்டன. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிதானா? என்ற கேள்வி எழும் வகையில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மரக்குவியல்களாக கிடக்கின்றன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது. முண்டக்கை பகுதியில் 540 வீடுகளும், சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன.…
புதுச்சேரி துணைநிலை ஆளுராக கைலாசநாதன் 7-ஆம் தேதி பதவி ஏற்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி…
