நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான முறைகேடு தொடர்பாக தேர்வு எழுதிய பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவர் அணு தொடர்பான 29-வது கேள்விக்கு ஆப்சன் 4 மற்றும் ஆப்சன் 2 ஆகிய இரண்டையும் தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் காரணமாக தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. என்சிஇஆர்டி-யின் (NCERT) புதிய புத்தகத்தை பின்பற்றவும் என தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டிருந்தது. அதன்படி ஆப்சன் 4 சரியான விடை. பழைய புத்தகத்தின்படி ஆப்சன் 2 சரியான விடையாகும். ஆனால் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆப்சன் 2 என பதில் அளித்தவர்களுக்கு 4.2 லட்சம் பேர் கருணை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் 44 பேர் முழு மதிப்பெண் பெற்றவர்கள் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மனு தாக்கல் செய்திருந்தவர் 711 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.…
Category: இந்தியா
இறந்தவர் பெட்ரோல் பாட்டிலுடன் பள்ளியில் தகராறு அதிர்ச்சியில் போலீசார்
ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதோரா கிராமத்தில் வசிக்கும் பாபுராம் பில்லுக்கு ராஜஸ்தான் அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார். அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார். அதன்படி, சமீபத்தில் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் விரைந்து வந்து பாபுராமை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது, “போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன்…
‘ஒருவரின் உயிரை காப்பதே என் மதம்’: கன்வார் யாத்திரை பக்தர்களை காப்பாற்றிய முஸ்லிம் காவலர்
புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள். அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கன்வார் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தவறி விழுந்துள்ளனர். அப்போது உடனடியாக செயல்பட்ட பேரிடர் மீட்புப்படை தலைமை காவலாரான ஆசிப் அலி தனது சக காவலர்களுடன் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ளார். கங்கை ஆற்றில் தவறி விழுந்த 5 பக்தர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்வார் யாத்திரை பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை நடந்துள்ளது. “உயிருக்கு போராடும் ஒருவரை…
நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம்
இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, நேற்று மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மருத்துவக்…
ஆசிரியை ஆனார் குடியரசுதலைவர் திரவுபதி முர்மு
நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார். பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார். மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு…
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட அஞ்சலை மீது கந்துவட்டி வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கந்துவட்டி புகாரில் அஞ்சலை கைது செய்யப்பட்டார். அஞ்சலையின் மருமகன், டாட்டூ மணி, கொடுத்த புகாரின் பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து, ரூ.43 லட்சம் வரை வசூல் செய்த வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கந்துவட்டி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலைக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து…
நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. சுமார் 1,302 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களுக்கு இணையாக சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு…
‘நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு என்ன தெரியும்?’ – சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கு பதில் முதல்வர் நிதிஷ் குமார்- கொதித்த உறுப்பினர்கள்
பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார். நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், ‘நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்- சித்தராமை- நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பு
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேகதாது, மகதாயிக்கு…
