ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டபாலம் ஆர்கா நதி பாலம் இடிந்து விழுந்து விபத்து

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்ட வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment