நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் -. என்டிஏ-வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது. இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது. நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின்…

உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது. விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும்…

டெல்லியில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை. இதனால் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது. இந்த…

கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும்மசோதாவில் குழப்பங்கள் உள்ளன- சித்தராமையா

கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:- திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை…

உத்தர பிரதேச ரெயில் விபத்துக்கு பிரதமரும், ரெயில்வே அமைச்சரும் நேரடி பொறுப்பு- மல்லிகார்ஜுன கார்கே

உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், மோடி அரசில் ரெயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் ரெயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ரெயில் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உ.பி.யில் சண்டிகர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மோடி அரசு எப்படி முறையாக ரெயில் பாதுகாப்பை…

கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்

கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் ‘கன்னட நிலத்தில்’ வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக…

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் விலை ரூ.2,500-மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார். இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ஆம் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர்…

.நீட் தேர்வு முடிகளை ரத்து செய்யமுடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் 38 மனுக்களும் தள்ளுபடி

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடிக்கு பிரியங்காகாந்தி வேண்டுகோள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக கூறினார். இன்று அதே மும்பையில் ஒருசில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவு திரண்டு வந்த வீடியோ ‘வைரல்’ ஆகியுள்ளது. அதற்கு முன்பு, குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர். அதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் பார்த்தால், முந்தைய சாதனை நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதீத வேலைவாய்ப்பின்மை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது. எனவே, வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். வயதாகி வரும்…

ஆந்திராவில் காகத்தை கட்டி போட்ட கோழிக்கறி கடைக்காரர் நூற்றுக்கணக்கான காகங்கள் அலறல்- வீடியோ வைரல்

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கோழி கறிக்கடைகாரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டுக் கொண்டிருக்கும் காகங்களை அச்சுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கயிற்றில் கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டப்பட்ட காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின. இந்த சத்தத்தை தாங்க முடியாமல், அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் கோழி கறிக்கடைகாரரிடம் காகத்தை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர் காகத்தின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோழிக்கறி கடைக்காரரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.