பூமியைத் தாக்கும் ராட்சத விண்கல்

விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான…

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளை நேரில் அஞ்சலி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்த தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக 3 மாடிகளை கொண்ட வீட்டை கட்டி வந்தார். தினமும் வீடு கட்டும் இடத்தில் சேர் போட்டு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். பின்னர் அயனாவரம் வேணுகோபால் தெருவில் தற்போது வசித்து வந்த வீட்டுக்கு செல்வார். நேற்று இரவும் வழக்கம் போல புதிய வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த போதுதான் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டப்பட்டார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை…

2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்

வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெ் கூட்டத்தொடர்ப நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

குஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-இடிபாடுகளில் பலர் சிக்கி தவிப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறுமாறு சூரத் நகராட்சி வலியுறுத்தியுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.2017-18ல் கட்டப்பட்ட கட்டடம்,…

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுதலைமீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிர்வாக தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில் நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னதாக சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார். ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கடந்த 28ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டமன்ற குழு தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஹேமந்த் சோரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை…

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர். இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 12 வயதுடைய ஒரு மாணவன் உயிரிழப்பு

கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக…

பீகாரில் ஒரே நாளில் இடிந்து விழுந்த 2 பாலங்கள் கடந்த 15 நாட்களில் இது 7-வது பாலம்

பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது-சாமியார் போலே பாபா அறிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலே பாபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட…

போலி சாமியார்களை சமாளிக்க புது சட்டங்கள் தேவை – காங்கிரஸ் தலைவர் கார்கே

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, “ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு…