குஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-இடிபாடுகளில் பலர் சிக்கி தவிப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறுமாறு சூரத் நகராட்சி வலியுறுத்தியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Leave a Comment