நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற…
Category: இந்தியா
மகாராஷ்டிராவில் முதல் பெண் தலைமைச் செயலாளர் சுஜாதா சவுனிக் பொறுப்பேற்பு
மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா சவுனிக் இன்று பதவியேற்றார். 64 ஆண்டுகால வரலாற்றில் மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார். தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற நிதின் கரீருக்குப் பிறகு 1987 பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சவுனிக் இன்று பதவியேற்றார். இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு வருடம் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள மாநிலச் செயலகமான மந்த்ராலயாவில் நடைபெற்ற விழாவில் சவுனிக்கிடம் கரீர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமைச் செயலாளராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன்பு, சவுனிக், அவரது கணவர் மனோஜ் சவுனிக் முன்னாள் மாநில தலைமைச் செயலாளரும் ஆவார். இவர், மாநில உள்துறைத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தார். சுகாதாரம், நிதி, கல்வி,…
ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டபாலம் ஆர்கா நதி பாலம் இடிந்து விழுந்து விபத்து
பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்ட வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
பீகாரில் 11 நாட்களில் 5-வது பாலம் இடிந்து விழுந்தது: பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும். 18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட…
