இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.அந்த மனுவில், குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி, 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருவதாகவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு…
Category: இந்தியா
டெல்லியின் முதல் தலித் மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி அவையில் ஏற்பட்ட தொடர் அமளி மற்றும் ஆம் ஆத்மி- பாஜக இடையேயான மோதல், அப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதானது ஆகிய காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை. ஏழு மாத தாமதத்துக்குப் பிறகு, இன்று(டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் தேவ்நகர் கவுன்சிலர் மகேஷ் கிச்சி, பாஜகவின் ஷகுர்பூர் கவுன்சிலர் கிஷண் லால் போட்டியிட்டனர். டெல்லி ல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் மகேஷ் குமார் கிச்சி 133 வாக்குகள் (2 செல்லாதவை), கிஷண் லால் 130 வாக்குகள் பெற்ற நிலையில், 1 வாக்கு வித்தியாசத்தில்…
மணிப்பூரின் 6 பதற்றமான பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது
மணிப்பூர் மாநிலத்தின்பதற்றமானதாக அறிவிக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனக் கலவரம் காரணமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் AFSPA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆறு காவல் நிலையங்கள் உட்பட 19…
விவசாய கடன் தள்ளுபடி, மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிட்டார்
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார். மத்திய மந்திரி பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். லட்கி பஹின் யோஜனா வரம்பு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். விருத் பென்சன் யோஜனா உச்ச வரம்பு ரூ.1500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விலையை சீராக வைத்திருக்க சந்தையில் தலையிடப்படும். அரசு அமைந்த 100 நாட்களுக்குள்…
அமரன் படத்தை தடை செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ. போராட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் “அமரன்.” தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்…
இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாஸ்டிக் தோலுடன் ராஜஸ்தானில் பிறந்த இரட்டை குழந்தைகள்
ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா [Nokha] நகரரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் இந்த தன்மையோடு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தை எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது. இதற்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த தன்மை கொண்ட குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சில குறிப்பிட்ட நிலைகளில் வளரிளம் பருவம் வரை உயிர்பிழைத்திருக்க முடியும் வேண்டும் தெரிவிக்கின்றனர்.
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிக்கு விண்ணப்பித்தது மத்தியஅரசு
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது. 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக்…
அசாமில் இறைச்சிக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்கள் மீட்பு – 4 பேர் கைது
அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
ஆக்ரா அருகே இந்திய மிக்-29 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது
மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ரூ.1.29 கோடி மோசடி -ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேர் கைது
அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள் ஸ்டிக்கர்களை மாற்றிய…
