தமிழ்நாடு அரசின் மருத்துவக் கட்டமைப்பு, சாதனைகள்- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மா. சுப்ரமணியன் விளக்கம்

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்குஎனது சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 1923 இல் தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பின் மூலம் முன்னோடியாக பல்வேறு பொது சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏழை எளியோர்களுக்காக 23.07.2009 அன்று காப்பீடு திட்டத்தை தொடங்கியவர் 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்த திட்டம் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக” கடந்த…

அவதார், டைட்டானிக் திரைகாவியத்தை தயாரித்த ஜான் லாண்டவ் உயிரிழப்பு

உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார். இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, “ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்,” என்றார். ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி…

ரஷியாமீது உக்ரைன் டிரோன் தாக்குல்- ரஷியாவில் அவரச நிலை அறிவிப்பு

ரஷிய பகுதிகளில் உக்ரைன் நேற்று நாளிரவு நடத்தியுள்ள டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷியாவின் வடக்கு பகுதியான வோரோநெஷ் [voronezh] பிராந்தியத்தில் நடந்த இந்த டிரோன் தாக்குதலால் சேமிப்பு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்நிலையில் வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் டிரோன்களளில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நடந்துவருகிறது. கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்கு நாடுகளில் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது.…

ஸ்பெயினில் அறிமுகமாகும் பார்ன் பாஸ்போர்ட்

இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது. இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது. ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப்…

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பெண் உமா குமரன் வெற்றி

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை சூடியுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன்…

8 தமிழர்கள் போட்டியிடும் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியது . வாக்குப்பதிவு

பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன்…

ஜப்பான் தனது H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக (மோசமான வானிலை) தள்ளிவைப்பட்டது. இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது. 2-ம் வகை என்ஜின் செயல்படாமல் தோல்வியடைந்ததால் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. அதன்பின் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக…

இலங்கை எம்.பி இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இரா.சம்பந்தன் இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் 4 சூரியன்கள் போல பிரகாசித்த பறக்கும் தட்டுகள்?- வீடியோ வைரல்

கனடாவின் மானிடோபா மாகாணத்தில் கார் பயணம் செய்து கொண்டிருந்த ஜஸ்டின் ஸ்டீவன்சன்(49) அவரது மனைவி டேனியல் (32), வானில் திடீர் வெளிச்சத்தை கண்டு வியப்படைந்தனர். உடனே அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இரட்டை கோளங்களாக அருகருகே நெருப்பு பிழம்பு போல பிரகாசமாக ஒளிர்ந்தது. அவை வின்னிபெக் ஆற்றின் மீது வட்டமிடுவதுபோன்று நகர்ந்தன. அதை படம் பிடித்துக்கொண்டே பேசிய ஸ்டீவன்சன், “யே..கோவ்… நாங்கள் நிஜமாகவே சில வேற்றுக்கிரக வாசிகளை பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று பேசுகிறார். அப்போதே சற்று அருகில் அதேபோன்று மேலும் 2 இரட்டை கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்தன. மொத்தம் 4 சூரியன்கள் ஒளிர்வது போல இந்த காட்சிகள் தெரிந்தன. எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது. பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை…

ஸ்பேஸ் பே (Space Bay) ஆக மாறும் தமிழக மாவட்டங்கள்

விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது. வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.