வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு அமைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை: ஆள்கொணர்வு மனு தள்ளுபடி தமிழக அரசு விசாரணைகளுக்குத் தடையில்லை – உச்ச நீதிமன்றம்

ஆன்மிகத் தலைவர் என கூறப்படும் ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆள்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான பிற வழக்கு விசாரணைகளுக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஈஷா அறக்கட்டளையில் இருக்கும் தனது இரண்டு மகள்களும் மூளைச்சலவை செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் அளித்த புகார் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார் தாரரின் இரண்டு மகள்களும், தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் ஆள்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது, நாங்கள் ஆள்கொணர்வு மனு…

வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்

வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்கிறது. இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜூலை 30) காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது கரை செல்லும் பகுதியில் முத்து என்கின்ற ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மண்சுவர் வீடு அதிகாலையில் இடிந்து விழுந்தது இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது பேத்தி தனபிரியா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலையில் அவ்வழியாகச் சென்றவர்கள் வீடு இடிந்து…