சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டம் வழங்கினார்

சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார். இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர்…

உழைக்காமல் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை- எடப்பாடி முன்னாள் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை…