நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் “அமரன்.” தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்…
Category: முதன்மை செய்திகள்
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,2024 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கனவினை…
பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய்: தமிழக அரசு அறிவிப்பு
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவாகியுள்ளது. அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருப்பினும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவ. 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிதழில்…
90 ஆண்டுகளில் முதல் முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை- தமிழக நீர்வளத்துறை திட்டம்
1934ம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில், 90 ஆண்டுகளில் முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளதாக தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையின்படி, மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாஸ்டிக் தோலுடன் ராஜஸ்தானில் பிறந்த இரட்டை குழந்தைகள்
ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா [Nokha] நகரரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் இந்த தன்மையோடு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தை எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது. இதற்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த தன்மை கொண்ட குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சில குறிப்பிட்ட நிலைகளில் வளரிளம் பருவம் வரை உயிர்பிழைத்திருக்க முடியும் வேண்டும் தெரிவிக்கின்றனர்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள்…
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிக்கு விண்ணப்பித்தது மத்தியஅரசு
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது. 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக்…
எந்த திசையில் யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி – விஜய்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜய்-க்கு பதிலடி கொடுத்தார். “எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி. 2026…
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!விறுவிறுப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு விதிமுறைகளின்படி தேர்தல் நேரம் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிமுதல் ஒவ்வொரு மாகாணமாக வாக்குப்பதிவு தொடங்கி வருகின்றது. புதன்கிழமை காலை 4.30 மணிமுதல் 11.30 மணிக்குள் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.அடுத்த அதிபா் யாா் என்பதை முடிவு செய்யும் போா்க்கள மாகாணங்களில் (இரண்டு முக்கிய கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய…
விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) திறந்து வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகம் விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது. தகவல்…
