விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால்,…

உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நிலையை நிலையை இந்தியா அடைந்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராளுமன்றத்தில் உரை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ஆம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். இதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். செங்கோலுடன் பாராளுமன்ற அவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது- மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

இந்த நிதியாண்டில் 5,000 கி.மீட்டருக்கு செயல்படுத்தப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவிய சீகன் பால்கு சிலையுடன் கூடிய அரங்கம்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் பிஷப் டேனியல் ஜெயராஜ், திரு. ஜீவராஜ் குருக்கள், திரு. சார்லஸ், திரு. எட்வின் சார்லஸ், திரு. செல்லதுரை, திரு. சாலமன், திரு. பாரதி, திரு. ஜஸ்டின், திரு. சத்தியமூர்த்தி, திருமதி பிரசன்னா மெர்சிபாய், திரு. என்வால் துரை, திரு. ஈஸ்டர் ராஜ், இவான்ஜிலுக்கல் லுத்ரன் திருச்சபையின் திரு. ஸ்டான்லி ஜோசப், திரு. ஆண்ட்ரூஸ் வாசுதேவன், திரு. அன்பழகன், கிரைஸ்ட் லுத்ரன் திருச்சபையின் டாக்டர் ஸ்டான்லி ஜோஸ், உபதேசியார் நலவாரிய துணைத் தலைவர் போதகர் பால் தயாநிதி, உறுப்பினர் நிக்சன், தென்னிந்திய திருச்சபையின் ஹேமில்டன் மற்றும் திரு. சாம்சன், திரு. ஜான்சன் மான்சிங், ஜான் சிம்சன் ஆகியோர்…

ரெயிலில் மேல் படுக்கை கீழே விழுந்ததால் படுகாயமடைந்த கேரளம் பகுதி நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு

நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது. போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.உங்களுக்கு ரெயிலில்…

இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது

மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது. முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி- இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) யாரும் மனுக்களைத் திரும்ப பெறவில்லை. இதனால், இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில்…

இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் இளம்சிவப்பு வண்ணக்களஞ்சியங்களாக ஒளித்திரள்கள்

சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டுள்ளது. இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுதந்திரமாக நாடு திரும்பும் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த…

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி…