உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆந்திர பிரதேச மாநில முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான…
Category: முதன்மை செய்திகள்
‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தைமுதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
4வது டுறையாக ஆந்திர முதல்- அமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு-கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் விழா
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா…
விழா மேடையில் வைத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித்ஷா?-காரணம் என்ன?
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழா மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர். விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார். வணக்கம் தெரிவித்துவிட்டு சென்ற தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து அமித்ஷா பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும்…
உபேந்திரா திவேதி இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக நியமனம்- பாதுகாப்பு அமைச்சகம்அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனெரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 உடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திரா பதவியேற்பார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்சமயம் ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படையணியை வழிநடத்தியுள்ளார். மேலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அசாம் ரைபிள்ஸ் படைக்கு கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் பணியாற்றியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும்…
இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண சென்ற பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை- ரசிகர்கள்
நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார். திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார்.…
கட்டணம் கேட்டதால் ஆத்திரம்: சுங்கச்சாவடியைபுல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.
உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி- பிரதமா் மோடி முதல் கையொப்பம்
பிரதமர் மோடி இன்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார். “இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற மோடி.. கொண்டாட்டத்தில் பற்றி எறிந்த பாஜக அலுவலகம்!
மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலுவலகத்தின் மேல் தலத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறை போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.!
விழுப்புரமாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
விழுப்புரமாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது…
