மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அலுவலகத்தின் மேல் தலத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது.
சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறை போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.!