அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பா.ஜ.க தலைமைக்கு சுரேஷ் கோபி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். “பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் எனினை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.” “திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்,” என்று தெரிவித்தார்.…
Category: முதன்மை செய்திகள்
பறக்கும் விமானத்தில் சுற்றித்திரிந்த பூனைவைரல்ஆன வீடியோ
பறக்கும் விமானத்திற்குள் பூனை ஒன்று சுற்றித்திரிந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து டென்னிசியின் நாஷ்வில்லி பகுதிக்கு இயக்கப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜேசன் பிட்ஸ் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு பூனை விமானத்திற்குள் சுற்றி திரிகிறது. வீடியோவுடன் அவரது பதிவில், சில நாட்களுக்கு முன்பு ஸ்பிரிட் ஏர்லைன்சில் ஒரு பூனை சுற்றித்திரிவதை கண்டேன். விமான பணிப்பெண்கள் அதனை கவனிக்கவில்லை. விமானத்தில் இருந்த ஒருவரின் பையில் இருந்து அது வெளியேறியது. பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் மோடி ஆட்சிஇந்திய பங்குச் சந்தை வர்த்தகம் எகிறியது
இன்று காலை முதல் வர்த்தகம் தொடங்கியது முதல் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் நிலையான ஏற்றத்தை கண்டுள்ளது. சென்செக்ஸ் 76,935 புள்ளிகள், நிஃப்டி 23,319 புள்ளிகள் என தொடங்கியது. அதிகபட்சமாக 77,079.04 என்ற புள்ளிகளை சென்செக்ஸ் இன்று எட்டியிருந்தது. நிஃப்டியும் 23,411.90 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. இதனால் பெரும்பாலான துறைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் உள்ளது. புதிய அரசின் கொள்கை முடிவுகள், மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகா போன்ற விவகாரங்களில் முதலீட்டாளர்களின் கவனம் இப்போது இருப்பதாக வணிக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இதனை பொறுத்தே ட்ரெண்ட் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் மீண்டும் மோடி ஆட்சி அமைக்கிறார் என தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதனால் கடந்த ஜூன் 3 ல் பங்குச் சந்தை வர்த்தகம் உச்சத்தை எட்டியது.…
கும்பகர்ண தூக்கத்தில் திமுக அரசு… எடப்பாடி பழனிசாமி காட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய…
விருதுநகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஓருவர் பலி, 37 பேர் படுகாயம்
கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (து 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது. இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர்.…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாழ்த்து1!
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பு
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், 7.15 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறுகிறது. இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்- ராகுல் காந்தி கண்டனம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது.இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதியில் பலத்த மழையால் பக்தர்கள் – 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, நந்தியாலா, கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசியது. இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும் அவதி அடைந்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மகிழ்ச்சியில் சந்திரபாபுநாயுடு குடும்பம்
ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த சந்திரபாபு நாயுடு ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
