இண்டியா கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களே உணர்ந்து விட்டார்கள். முன்னாள் ஆளுநர் தமிழிசை பதிவு

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இண்டியா கூட்டணி என்றவர்கள், இன்றைக்கு மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறனர். பல்லாண்டு காலமாக தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்றமமதையில் இயங்கி வந்த காங்கிரஸுக்கு எதிராக பாஜக இன்று அசுர பலம் பெற்று வலம் வருகிறது. இடைவிடாத உழைப்பால் பிரதமரும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் இண்டியா கூட்டணி உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் வெற்றி எழுதப்பட்டுவிட்டது. அதிகாரப்பூர்வமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்றும் 3 நாட்களே உள்ளன.எனவே வாக்கு எண்ணிக்கையின்போது அதிக விழிப்புணர்வுடன் பாஜக கூட்டணி கட்சியினர் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் மக்களை ஏமாற்றியே அரசியல் செய்யும் கூட்டத்தோடு…

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா முன்னிலை மீண்டும் ஆட்சி அமைக்கிறது

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை நடைபெரும் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக…

அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் வாக்குப்பதிவு…

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ஆம் தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின்…

இறுதிகட்ட தேர்தல் மே.வங்கத்தில் வன்முறைகுளத்தில் இவிஎம் இயந்திரத்தை தூக்கி வீசிய கும்பல்

மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூறையாடினர். அதோடு இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்டமாக 9 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தெற்கு 24 பர்கானஸ் பகுதியில் இவிஎம் இயந்திரங்கள் திருடப்பட்ட நிலையில், இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தளத்தில் தகவல்களை பதிவிட்டுள்ளது. அதில், இன்று காலை 6.40 மணியளவில் பெனிமாதவ்பூர் எஃப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் (எஸ்சி) பகுதியின் செக்டார் அலுவலரின் ரிசர்வ் இவிஎம் இயந்திரம் மற்றும் அங்குள்ள பேப்பர்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஒரு…

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

ஏர்வாடி தர்காவின் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 9-ஆம் தேதி தொடங்கியது. அதனையடுத்து மே 19-ஆம் தேதி நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில்…

தாய்ப்பால் விற்பனையை கண்கானித்து நடவடிக்கை- மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு

சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர், மாதவரம் கே.கே.ஆர். கார்டன் 1-வது தெருவில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மருந்து கடையில், மாதவரம் பால்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி அவற்றை பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து 30 மில்லி 500 ரூபாய் என அப்பகுதியில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுபாஷ் சந்திரபோஸ், அருளானந்தம் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நேற்று அந்த மருந்து கடையில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில் 50 பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்தையாவிடம் உணவு…

காங்கிரஸ் சார்பில் கர்நாடக மேல்சபையில் தமிழருக்கு வாய்ப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

கர்நாடக மேல்சபையில் 11 எம்.எல்.சி.களின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூன்) நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 11 இடங்களுக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் உள்ள காங்கிரசின் பலத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு 7 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி டெல்லி சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி. ஆகியோருடன் 2 முறை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 7 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா,…

மும்பை விமான நிலையத்தில் தரையில் படுத்து உருண்டு நடனமாடிய பெண்

டெல்லி, மும்பையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வே நடைமேடைகளில் இளம்பெண்கள் திடீரென நடனமாடுவது, இளைஞர்கள் சாகசம் செய்வது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும் அதை சில பயணிகள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. சல்வார் குர்தா அணிந்திருக்கும் அந்த பெண் 2000-ம் ஆண்டில் வெளிவந்த குருசேத்ரா எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற ‘ஆப் க ஆனா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சல்வார் துப்பட்டாவை தூக்கி வீசி நடனம் ஆடிய அவர் திடீரென விமான நிலையத்திற்குள் தரையில் படுத்து…

100 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் இருந்து இந்தியாவிற்கு வந்தது- முதல் 10 நாடுகளில் இந்தியா

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நிதி நிலைமை நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது அதில் இருந்து மீளவைக்கும் நம்பகமான சேமிப்பு பொருளாக தங்கம் பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன. தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி சமீப ஆண்டுகளாக அதிக அளவில் தங்கத்தை குவித்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில், ரிசர்வ் வங்கியிடம் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் உள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி 16 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்திருந்த நிலையில் இந்த…