டெல்லி, மும்பையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வே நடைமேடைகளில் இளம்பெண்கள் திடீரென நடனமாடுவது, இளைஞர்கள் சாகசம் செய்வது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும் அதை சில பயணிகள் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. சல்வார் குர்தா அணிந்திருக்கும் அந்த பெண் 2000-ம் ஆண்டில் வெளிவந்த குருசேத்ரா எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற ‘ஆப் க ஆனா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சல்வார் துப்பட்டாவை தூக்கி வீசி நடனம் ஆடிய அவர் திடீரென விமான நிலையத்திற்குள் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர், விமான நிலையங்களுக்கும் இந்த கிருமி வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். ஏராளமான பயனர்கள் தங்களது பதிவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.