பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்…
Category: முதன்மை செய்திகள்
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யக்கூடாது – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் என இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக 250-க்கு குறைவாக வென்றால் பங்கு சந்தை 20% வரை சரியும்: முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா கணிப்பு
மக்களவைத் தேர்தலில் பாஜக 250 இடங்களுக்கு குறைவாக வென்றால், பங்குச் சந்தை 15% முதல் 20% வரையில் வீழ்ச்சி அடையும் என்று முதலீட்டு நிபுணர் ருசிர் சர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், “பங்குச் சந்தை குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தத் தேர்தலில் பாஜக இதுவரையில் அல்லாத அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தையும் உச்சம் தொடும்” என்றார். இந்நிலையில், பாஜக 250 இடங்களுக்கு குறைவாக வென்றால், பங்குச் சந்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சரிவைக் காணும்என்று முதலீட்டு நிபுணரும் ராக்பெல்லர் கேபிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவருமான ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.
17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதி 2 பேர் பலியான விவகாரம் மருத்துவமனை ஊழியர் கைது
புனே சொகுசு கார் விபத்து வழக்கில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: மருத்துவமனை கடைநிலை ஊழியர் கைது மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவ னுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானதை தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அச்சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள்…
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ பதிவில் புதிய தகவல்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு…
5ஆம் கட்ட தேர்தல் தற்போதைய நிலவலப்படி 23.66 சதவீதம் வாக்கு பதிவு
நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிஎன மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப்பிரதேசம்: 27.76 சதவீதம், மகாராஷ்டிரா: 15.93சதவீதம்,…
தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.55,200 ஆனது
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூபாய் 100 ஐ கடந்து ரூ.101க்கு விற்பனை ஆகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் – யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் ஒன்று
நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக யுஜிசி பட்டியல் வெளியிட்டுள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன் மூலம் நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை. பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இந்தப் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ இணையத்தில் அறிந்து கொள்ளலாம்
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது
உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த விடியோவில், வெவ்வேறு அரசு அடையாள அட்டைகளுடன் வெவ்வேறு நேர இடைவெளியில் இளைஞர் ஒருவர் எட்டு முறை பாஜகவுக்கு வாக்களிப்பதைக் காணலாம். இந்த விடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் ஆகியோர் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை…
