எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-ஹேமந்த் சோரன் ஆவேசம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியில் வந்தார்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. ஜார்க்கண்டில் இருந்து காவி கட்சி ஒழிக்கப்படும். இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பா.ஜ.க.வுக்கு நிபுணத்துவம் உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது என தெரிவித்தார்.

Related posts

Leave a Comment