நடமாடும் மருத்துவ கருவி மூலம் சட்டவிரோதமாக வயிற்றில் இருக்கும் சிசுவை கண்டறிந்த கும்பல் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தில் மர்மகும்பல் ஒன்று போலி மருத்துவத்தில் ஈடுபடுவதாய் சுகாதார மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் சாந்தி என்பவருக்கு தகவல் வந்தது.

சம்பந்தப்பட்ட நபர்களை ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி அதிரடியாக களத்தில் இறங்கி சுற்றி வளைத்தார்.

இந்நிலையில், வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார்.

ஒரு நபருக்கு 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு அவர் நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
\

Related posts

Leave a Comment