துப்பாக்கிச் சூடு என்னை பலமானவனாக மாற்றியுள்ளது“ – வாசகத்துடன் விற்பனையாகும்டொனால்ட் ட்ரம்ப் டி-சேர்ட்டுகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்றைய தினம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவருக்கு பலரும் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், தற்போது டி-சேர்ட் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

டொனால்ட் ட்ரம்பின் காதில் இரத்ததுடனும் ஒரு கையை உயர்த்தியப்படியும் இருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டு ‘துப்பாக்கிச்சூடு என்னை பலமானவனாக மாற்றியுள்ளது’ (Shooting Makes Me Stronger) என்ற வாசகத்துடன் குறித்த டி-சேர்ட்டுகள் இணையவழியில் விற்பனையாகி வருகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தி 3 மணிநேரத்திற்குள் சீன இ-கொமர்ஸ் தளமான Taobaoஇல் இந்த டி-சேர்ட்டுகள் விற்பனைக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment