ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுக-வில் இருந்து நீக்கம்- எடப்பாடி அறிவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் ( திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related posts

Leave a Comment