ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரன் த.மா.கா.-வில் இருந்து நீக்கம்-ஜி.கே.வாசன் அறிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹரிஹரன் ஏற்கனவே தமாகா மாநில மாணவரணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த ஏழுமலை – நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

Related posts

Leave a Comment