வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும்.
வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு அயலக தமிழர் நலன் ஆணையம் மூலம் உதவிகளை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: இந்தியாவிற்குள் – +91 1800 309 3793, வெளிநாடு – +91 80 6900 9900 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வங்கதேசத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தமிழர்களுக்கு உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குஜராத்: லன்ச் பீரியடில் இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்.. அலறிய மாணவர்கள் – வீடியோ
குஜராத் மாநிலத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.
வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது – முன்னாள் முதல்வரை குறி வைக்கும் அமலாக்கத்துறை