திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் – பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.
இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.
மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
மாடியில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த 7வருடங்களாக சின்னசேலம் வான கொட்டாய் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் இளநிலை பயிற்சி அலுவலராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக இவரது மனைவியும் குழந்கதைளும் சிதம்பரம் சென்றதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே பார்த்தபோது வீட்டின் சந்தில் சுந்தர்ராஜன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்த போது சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.