சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்பட்டுள்ளது’ என சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி ராட்வெய்லர் நாய் இனத்தை இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை வளர்க்கலாமா? என சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ராட்வெய்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புகழேந்தியின் மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ்வரனும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய, ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர்கள் கைது-காவல்நிலைய ஜாமீனில் விடுதலை
