பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடிசாமி தரிசனம்

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது.

பிராசரம் ஓய்ந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.

கன்னியாகுமரி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ஆம் தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment