மத்தியபிரேதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 94 தொகுதிகளில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நேற்று நடந்தது.மத்தியபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பீட்டுல் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்தில் 6 வாக்கு இயந்திரங்கள் இருந்தன. வழியில் இரவு 11 மணியளவில், அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
தீவிபத்து ஏற்பட்டதும் கதவுகள் அனைத்தும் சிக்கிக் கொண்டன. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அனைவரும் வெளியே தப்பி ஓடிவந்தனர். யாருக்கும் எந்தவித காயங்களும், பாதிப்புகளும் ஏற்படவில்லை. நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து வெளியேறியதால் காயமின்றி தப்பினர். இதில் அதிலிருந்த 4 இயந்திரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக தலைமைத் தேர்தல் துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மறு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் துறை அறிவிக்கும் எனவும் கூறினார்.