திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை எழுந்தது. அந்த பெண்ணிடம் 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஜெயக்குமார் தனசிங்கின் கையெழுத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மரண வாக்குமூலம் என்ற பெயரில் ஒரு கடிதமும், குடும்பத்தினருக்கு என மற்றொரு கடிதமும் ஜெயக்குமார் தனசிங் பெயரில் வெளியாகின. இந்நிலையில் மற்றொரு கடிதமும் வெளியாகி உள்ளது. இதில் உள்ள கையெழுத்துகள் வெவ்வேறாக உள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசுக்கு ஜெயக்குமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார். அதிலும் கையெழுத்து வேறாக உள்ளது. இதனால், அதில் எது அவரின் உண்மையான கையெழுத்து என்பதை உறுதி செய்ய முடியாமல் போலீசார் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.