புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள திரு .நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து 12,700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல்

நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்..பட்ஜெட் முக்கிய சில அம்சங்கள்
2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
உள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரங்கசாமி பேரவையில் தகவல். புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.
இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு.

Related posts

Leave a Comment