புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் மர்மநபர் ஒருவர், கனடாவில் வேலை தருவதாக உறுதியளித்தார். அவரை நம்பர் வைத்து, மேலும் விசா (வேலை அனுமதி), மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணத்தை டெபாசிட் செய்தால் மேற்படி வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி 17,77 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியள்ளார். அதைத் தொடர்ந்து ரஅமஷ்குமார் புதுச்சேரி இணைய வழி போலீசில் புகார் கொடுத்தார்.
புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் அவர்களின் உத்தரவின்பேரில் ஈன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீழ்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவந்தனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை பற்றி கண்டுபிடிக்க கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நவீன முயற்சிகளான அவர்களது வங்கி பரிவர்த்தனை, டெலிகிராம் தொடர்புகள், வாட்ஸ்அப் தொடர்புகள், இரவு தங்கும் இடங்களின் இருப்பிடம் முதலிய தரவுகளை வைத்து பல கோணங்களில் மேற்கொண்டனர். இந்த முயற்சிகளில் மேற்படி குற்ற செயல்களை புரிந்த குற்றவாளிகள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் தற்போது பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிந்தது. சைபர் கிரைம் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், சைபர் கிரைம் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர்களின் தலைமையின் கீழ் கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிற்கு சென்று விசாரனை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி தலைமையின் கீழ் சைபர் கிரைம் போலிசார்களான தலைமை காவலர் மணிமொழி, காவலர்களான வினோத், பாலாஜி பெண் காவலர்களான ரோஸ்லின் மேரி மற்றும் செல்வி. கமலி ஆகியோர்களை கொண்ட தனிப்படை மேற்படி நபர்களின் இருப்பிடத்தை இணையவழி தொழில் நுட்பம் மூலம் அறிந்து நேற்றுகண்டுபிடித்தனர்.இதில் குற்றவாளிகளான சுபம் ஷர்மா மற்றும் அவரது கூட்டாளிகளான தீபக் குமார், ராஜ் கௌண்ட், நீரஜ் குர்ஜார் ஆகியோர்களை இணைய வழி போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் கூட்டாக சேர்ந்து இதுபோன்று இந்தியா முழுவதும் 3400-க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியிருப்பதும், அவர்களை ஒன்பது மாநில போலிசார்களான கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், டெல்லி, அசாம், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்படி குற்றவாளிகளை தேடி வருவதாகவும் தெரியவந்தது.
அதன்படி, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அசாம் கான் என்பவர் அவரது தலைமையின் கீழ் மேலே குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் தனிக்குழுக்களாக அமைத்து, அவர்களை வைத்து கிட்டதட்ட 3400-க்கு மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் பல்வேறு நபர்களை சுமார் 6 கோடி வரைக்கும் ஏமாற்ற வேண்டும் என்று குறிக்கோள் எடுத்து அவர்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்றும், எவ்வாறு ஏமாற்ற வேண்டும், அவர்களிடமிருந்து எவ்வளவு பணத்தை கேட்க வேண்டும் என்றும், எந்த வங்கி கணக்குகள் கொடுக்க வேண்டுமென்றும் திட்டமிட்டு தயார் செய்துள்ளனர். அதன்படி பல்வேறு தரப்பட்ட நபர்களை கடந்த பல வருடங்களாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. மேலும், மேற்படி குறிப்பிட்ட குற்றவாளிகள் அவர்களது குற்ற செயலுக்காக அசாம் கான்-யிடமிருந்து ஏமாற்றப்பட்ட பணத்திலிருந்து கமிஷன் பணமாக 50% பெறுவார்கள் என்பதும், அதன்மூலம் மேலே குறிப்பிட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு நபர்களை ஏமாற்றி அதன்மூலம் பெற்ற பணத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான கார் மற்றும் தற்போது ஒரு கோடி 16 லட்சம் மதிப்பிலான பிளாட் ஒன்றினை புக் செய்து அதற்கு முன்பணமாக ரூ. 12 லட்சம் பணத்தை முன்பணமாக டெபாசிட் செய்திருப்பதாகவும் விசாரனையில் தெரியவந்தது.

மேலும், குற்றவாளிகள் இதுபோன்று குற்றசெயல் புரிய பலவகையான செல்போன், லேப்டாப், சிம் கார்ட் மற்றும்ஏடிஎம் கார்ட்கள் பயன்படுத்தியதையடுத்து அவர்களிடமிருந்து 21 செல்போன், 2 பாஸ்போட், 42 சிம் கார்ட்-கள், 1 லேப்டாப், 64 ஏடிஎம் கார்ட்கள், ரூ.41 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைதுசெய்து தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது பற்றி புதுச்சேரி இணைவழி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்னவென்றால் இணைய வழியில் வருகின்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்மந்தமாக எந்த செய்தியையும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் அதனுடைய உண்மை தன்மை அறிந்த பிறகு பணம் செலுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.