நாடாளமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் இன்று (மே 14) பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார். அவர் கூறியதாவது: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.