‘பாரம்பரிய முறையில் மயில் கறி செய்வது எப்படி?’ சமையல் வீடியோவால் சிக்கலில் மாட்டிய யூடியூபர்கைது செய்யப்டுவார் எஸ்பி தகவல்

தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.

பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடைப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.

இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை.

Related posts

Leave a Comment