தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிநடிகை குஷ்பு விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment