புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகணபதி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்க மின்துறையின் மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் 200 KVA திறனுடைய புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திருமலை வீதியில் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
இதில், மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், சிவகணபதி நகர் ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராசு, வேதாச்சளம், சசிகுமார், பாபு, சண்முகம், குருசாமி, முருகையன், கந்தசாமி, வெங்கடேசன், கண்ணையன், சரவணன், கார்த்திகேயன், உதயகுமார், கன்னியப்பன், ஜாபர், தனக்கோடி, வீரமணி, கனகராஜ், பிரகாஷ், பாஸ்கர், சீதாராமன், வடமலை, குமார், கரிகாலன், ஞானவேல், கிருஷ்ணசாமி, சக்திவேல், குமாரசாமி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பேரவைத் தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சபரி, ராஜி, ஏழுமலை, முருகன், நடராஜன், முருகேசன், கோவிந்தராஜ், அன்பு, நாகராஜ், பவித்ரன், பாலு, சிலம்பு, கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.