கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுமைமை ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ” 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் கருணாநிதி படைத்துள்ளார்கள்.

தனியொரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என எண்ணும் வண்ணம் கலைஞர் சாதனை படைத்துள்ளார்.

கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.

தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment