சென்னை தனியார் கால் சென்டரில் உளவு பிரிவு அதிகாரிகள் சோதனை சட்டவிரோதசெயல்கள் கண்டுபிடிப்பு

கிரீம்ஸ்ரோடு முருகேசன் நாயகர் வணிக வளாகத்தில் ‘ஆப்செட் பிசினஸ் சொல்யூஷன்’ என்ற பெயரில் தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தை 5 ஆண்டுகளாக கன்னிராஜ் என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 800 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.

முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன் களை திருப்பி செலுத்தும்படி கூறுவார்கள்.

மத்திய அரசின விதி முறைகளை மீறி செல்போன் சிம்கார்டுகளை சிம்டூல் பாக்சில் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக வோடபோன் நிறுவன அதிகாரி பிரபு புகார் செய்ததையடுத்து மத்திய உளவுப் பிரிவு டி.எஸ்.பி. பவன் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் குழுவினர் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.

6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் போது சிம்கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் அருணுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சட்ட விரோதமாக பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கால் சென்டர் உரிமையாளர் கன்னிராஜ், பொறுப்பாளர் உமாபதி ஆகியோரை காணவில்லை என்றும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

Related posts

Leave a Comment