மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.பொதுமக்களுக்கு ஐயப்பன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவி

கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சி பெரியகாட்டுபாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது.

புதுவையை அடுத்த மதலப்பட்டு உள்ளிட்ட 5 ஊரக மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய அரசால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆட்சியர், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று மதலப்பட்டு ஊராட்சியில் பெரிய காட்டுபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் மதலப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், மேல் அழிஞ்சப்பட்டு, கீழ் அழிஞ்சப்பட்டு, மற்றும் சிங்கிரிகுடி 5 ஊராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்குபெற்றனர்.

இந்த சிறப்பு முகாமிற்கு ஐயப்பன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றார். மதலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் வரவேற்றார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள் அரசு ஒப்பதாரர் ராஜசேகர், குடிமைப் பொருள் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மருது உமா மகேஸ்வரி, இந்திரா விஜயன், அழகு உமாராணி, ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கஜேந்திரன், ராம்குமார் பார்த்திபன், வேலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் சுபஸ்ரீ, கணபதி, ராஜவள்ளி, குணசேகர், திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment