புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 72 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்திய அரசு, கால்நடைப் பராமரிப்புத் துறை
ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு உரையாற்றினார். கல்லூரி டீன் செழியன் ஆண்டறிக்கை வாசித்தார்.இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ
ஜெயக்குமார், சாய் ஜெ சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, தலைமைச் செயலர் சரத்செளகான், ஆணையர் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை செயலர் ராஜூ மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஐந்தரை ஆண்டு கால்நடை படிப்பில் அதிகமதிப்பெண்கள் பெற்ற டாக்டர் விக்ரம் சந்து ஆறுபதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றார், டாக்டர்
அபர்ணா ராஜேந்திரன் ஓந்து பதக்கங்கள் பெற்றார்.இக்கல்லூரியில் புதுச்சேரி மட்டுமில்லாமல் கேரளா,மகாராஷ்டிரா, பீகார், உத்திரபிரதேசம், ஹரியானா,
நாகாலாந்து, ராஜஸ்தான் போன்ற பல்வேறு பகுதிகளைசேர்ந்தவர்களும் பயின்று வருகின்றனர்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி 25வது பட்டமளிப்பு விழா முதல்வர் பங்கேற்பு
