புதுச்சேரி.ஆக.27-புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நீடராஜப்பையர் வீதியில் அமைந்துள்ள சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மதிவண்டி மற்றும் மழை அங்கிகள் வழங்கப்ட்டது.
புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் மாணவிகளுக்கு வழங்கும் விலை இல்லா மிதிவண்டி மற்றும் மழை அங்கிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏ வழங்கினார். இதில் 10ம் வகுப்பு பயிலும் 70 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரகுமாரி மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் என பலர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், குணசேகரன்,கைலாஷ், சாமிநாதன், சிவகுமார், காமராஜ், சிவகுமார், விநாயகம், ஐயப்பன், ராஜா, ஜான், சசி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்..