ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.
கே.சி. தியாகி, தனது ராஜினாமா குறித்து கட்சித் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் பணிபுரிய முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை புதிய செய்தித் தொடர்பாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளது, ஐக்கிய ஜனதா தளம்.